தேர்தல் நேரத்தில்.. 100 நாள் வேலைக்கு "ஊதிய உயர்வு".. குஷியில் பொது மக்கள்.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தை மத்திய அரசு தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலோடு உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. 

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 294 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வரும் நிலையில் இனி நாள் ஒன்றுக்கு 319 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என மத்திய அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.

இந்த ஊதிய உயர்வானது மாநிலங்களுக்கு ஏற்றார் போல் உயர்த்தப்பட்டுள்ளது. மக்களவை பொதுத் தேர்தல் நடைபெறும் இந்த சூழலில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று இந்த அரசாணையானது வெளியிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமான சூழல் ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central govt increased 100 days rural work salary


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->