அரசு பள்ளிகளில் சோப்புடன் கை கழுவும் வசதி - மத்திய அரசு கடிதம்.!
central govt letter write to state govt for all schools hand wash facility with soap
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய பள்ளி கல்வித்துறை அமைச்சகம், ஜல்சக்தி அமைச்சகம், ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் உள்ளிட்டவை இணைந்து கடிதம் ஒன்று எழுதியுள்ளன.
அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருப்பதாவது:- "இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் துப்புரவு வசதி, குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது.
எனவே, அனைத்து அரசு பள்ளிகளிலும் சோப்புடன் கூடிய கை கழுவும் வசதி மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் குழாய் வசதி இருக்க வேண்டும். இதற்காக அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் போன்றவற்றில் 'ஜல்ஜீவன்' திட்டத்தின்கீழ், குடிநீர் குழாய் இணைப்புகள் பொருத்தப்பட வேண்டும்.
இதுமட்டுமல்லாமல், பள்ளிகளில் சுகாதாரம் குறித்து மாணவர்களுக்கு கற்றுத்தருவதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அதேபோன்று சோலார் மின்வசதி உருவாக்கப்பட வேண்டும். கழிப்பறை இருப்பது மிகவும் அவசியம். அவை அனைத்தும் மாணவர்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் தூய்மையாக இருக்க வேண்டும்.
இவை அனைத்திற்கும் தேவையான நிதியை 15-வது நிதிக்குழு சிபாரிசுப்படி மத்திய அரசு விடுவித்த நிதியிலிருந்து பயன்படுத்திக்கொள்ளலாம்" என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
central govt letter write to state govt for all schools hand wash facility with soap