ட்விட்டர், டெலிகிராமுக்கு பறந்த நோட்டீஸ் - மத்திய அரசு அதிரடி.! - Seithipunal
Seithipunal


ட்விட்டர், டெலிகிராமுக்கு பறந்த நோட்டீஸ் - மத்திய அரசு அதிரடி.!

இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சமூக ஊடகங்களுக்கு குழந்தைகள் தொடர்பான ஆபாச சித்தரிப்பு வீடியோக்கள் உள்ளிட்டவற்றை நீக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், குற்றவியல் பதிவுகளை அனுமதிக்கக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்ததாவது, "இந்திய இணையத்தில் கிரிமினல் மற்றும் தீங்கு விளைவிக்கும் பதிவுகள் வெளியாவதை ஏற்காத முடியாது.

அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த விஷயத்தில் சமூக ஊடகங்கள் விரைந்து செயல்படவில்லை என்றால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 79வது பிரிவின் கீழ் அவர்களின் Safety Harbour திரும்பப் பெறப்படும்.

இதுதொடர்பாக சமூக ஊடகங்களான ட்விட்டர், யூடியூப் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடக செயலிகளுக்கு இன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

central govt notice send to twitter telegram apps for obscene vedio uplode


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->