100 நாள் வேலை திட்டம்...! ஜன.1 முதல் ஆன்லைன் வருகை பதிவு..!! மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!
Central Govt order online attendance from 1st Jan in NREGA
மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. மாநில அரசின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சித் துறை சார்பில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ் பணிக்கு வரும் தொழிலாளர்களின் வருகை பதிவு மேற்பார்வையாளர் மூலம் கையால் எழுதப்பட்டு பதிவு செய்யப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திலும் ஆன்லைன் வருகை பதிவு முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடைமுறையானது வரும் ஜனவரி 1ம் தேதி முதல் நாடு முழுவதும் கட்டாயமாக்கப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் தொழிலாளர்களின் வருகை பதிவு போன்றவற்றை பதிவு செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக ஜனவரி 1ஆம் தேதி முதல் கையால் எழுதும் வருகை பதிவு இருக்காது. மேலும் கழிவறைகள், ஊறவைக்கும் குழிகள் போன்ற தனிப்பட்ட நோக்கங்களுக்காக இந்த விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களிலும் தொலைதூரப் பகுதிகளிலும் இணைய வசதி பிரச்சனை உள்ளதால் ஆன்லைன் வருகை பதிவில் சிரமம் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.
English Summary
Central Govt order online attendance from 1st Jan in NREGA