ரயில் தண்டவாளங்களுக்கு காம்பவுண்ட் சுவர்! மத்திய அரசின் புதிய திட்டம்!
Central govt planing to compoundwall for railway tracks
ரயில்களில் அடிப்படும் கால்நடைகளை தடுக்க மத்திய அரசு புதிய திட்டத்தினை வகுத்துள்ளது. கால்நடைகள் ரயில்வே தண்டவாளங்களை கடக்கும் பொழுது விபத்து ஏற்படுவதால் ரயில்களுக்கு அதிக சேதம் ஏற்படுகிறது. மேலும் ரயில் தடம் புரண்டு தாமதம் ஏற்படும் சூழலும் உண்டாகிறது. கடந்த 9 நாட்களில் 200 ரயில்களின் சேவை கால்நடைகளால் பாதிக்கப்பட்ட உள்ளது. குறிப்பாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வந்தே பாரத் ரயிலில் கடந்த மாதம் மூன்று முறை கால்நடைகளால் விபத்துக்குள்ளாகி தாமதமாக சென்றுள்ளது.
இந்த ஆண்டில் தற்பொழுது வரை 4000 ரயில்களின் சேவைகள் கால்நடைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அடுத்த ஆறு மாதங்களில் ரயில்வே தண்டவாளங்களுக்கு காம்பவுண்ட் சுவர் கட்டப்படும் என தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 1000 கிலோ மீட்டர் தூரத்திற்கு காம்பவுண்ட் சுவர் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் மூலம் கால்நடைகள் குறித்தான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குமா என்பது உறுதியாக சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார். சோதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
English Summary
Central govt planing to compoundwall for railway tracks