#BigBreaking: மக்களே உஷார்.. "கோடையில் பரவும் நோய்கள்".. மத்திய அரசு அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. வழக்கமான வெப்பநிலையை விட அதிகரித்து காணப்படுவதால் அடுத்தடுத்து வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோடை காலங்களில் வெப்ப அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மதிய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில் வெப்பம் தொடர்பான நோய்களுக்கான தேசிய செயல் திட்டம் கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனை அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்குமாறும், அந்த செயல் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி வெப்பத்தின் தாக்கம், வெப்பத்தால் ஏற்படும் நோய்களை இது கொள்ள சுகாதாரத் துறை தேவையான ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மருத்துவமனைகளில் உரிய வசதிகளை மேற்கொள்ளுமாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் பொழுது மக்களுக்கு உடல்நல குறைவு ஏற்படலாம். இவற்றை கருத்தில் கொண்டு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் தேவையான அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது பயன்படுத்தப்படும் ஓ.ஆர்.எஸ் பவுடர் போன்றவற்றை தேவையான அளவு கையிருப்பில் வைத்திருக்கும் படி மத்திய அரசு மாநில அரசுகளை வலியுறுத்தி உள்ளது. 

அதே போன்று மருத்துவமனைகளில் குளிர்சாதன வசதி மற்றும் தடை இன்றி மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், மேலும் அனைத்து மருத்துவமனைகளிலும் குடிநீர் வசதி, சோலார் பேனல் அமைத்தல் போன்றவற்றை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று ஒரு மார்ச் 1ம் தேதி முதல் வெப்பத்தால் ஏற்படும் நோய்களை கண்காணித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கும் படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central govt warns disease spread will increase in summer


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->