மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை.! - Seithipunal
Seithipunal


நாட்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதன் காரணமாக அனைத்து மருத்துமனைகளிலும் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

இந்நிலையில் நாட்டில் மீதும் கொரோனா பரவ ஆரம்பித்துள்ளதால் ஆக்சிஜன் பற்றாக்குறை மீண்டும் உருவாகக்கூடுடாது என்பதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மனோகர் அதானி மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். 

அதில் தெரிவித்திருப்பதாவது, " * நாட்டில் ஆக்சிஜன் ஆலை தொடர்ந்து செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். * ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு இருப்பதை உறுதி செய்யவேண்டும். 

* திரவ மருத்துவ ஆக்சிஜன் மருத்துவமனை வளாகத்தில் உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் உடனடியாக அதனை  நிறப்பவேண்டும். 

* மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உபகரண கருவிகள், வெட்டிலேட்டர், சுவாச கருவிகள் போன்றவை போதிய அளவில் இருப்தை உறுதி செய்ய வேண்டும். இதற்காக மாநிலங்களிலும் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைத்து கொள்ளலாம். 

* ஆக்சிஜன் இருப்பு குறையும் பட்சத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்து, அதை நிவர்த்தி செய்யும் பணியை மேற்கொள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central health department write letter to state govt for oxygen in hospital


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->