இந்திய பொருளாதாரத்தை 12 வது இடத்திற்கு தள்ளியது காங்கிரஸ் - மத்திய உள்துறை அமைச்சர் பேட்டி..! - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். அப்போது அவர், குஜராத்தில் அகமதாபாத் நகருக்கு அருகே உள்ள மேம்பாலம் மற்றும் ஆரம்ப சுகாதார மையத்தை இன்று திறந்து வைத்தார். 

அதன் பிறகு, குஜராத்தின் சனந்தில் ஊழியர்களின் மாநில காப்பீட்டுத் கழகத்தால் நடத்தப்படும் மருத்துவமனைக்கு அமித் ஷா இன்று அடிக்கல் நாட்டினார். இதையடுத்து அங்கு நடந்த பேரணியில் கலந்துகொண்டு அமித் ஷா பேசியதாவது, "சுகாதார சேவைகளை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி முழுமையான அணுகுமுறை உடன் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். 

மேலும் பேசிய அவர், "உலகின் 11வது பெரிய பொருளாதார நாடக இருந்த இந்தியாவை காங்கிரஸ் 12வது இடத்திற்கு தள்ளியது. அதனை மீண்டும் 11வது இடத்திற்கு உயர்த்தியவர் அடல் பிஹாரி வாஜ்பாய். இந்நிலையில், நரேந்திர மோடி பிரதமரான பிறகு இந்திய பொருளாதாரத்தை 5வது இடத்திற்கு கொண்டு வந்தார்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central home minister amitsha going to gujarat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->