சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் சிறந்த அணி! கோலி, வருண் உள்ளிட்ட 6 இந்திய வீரர்களுக்கு இடம்!
Champion Trophy 2025 ICC Dream 11 team
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் சிறந்த அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இன்று (மார்ச் 10) அறிவித்துள்ளது.
நேற்றுடன் (மார்ச் 9) நிறைவடைந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில், இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்ற பெருமையை பெற்றது.
இந்நிலையில், நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறந்த ஆட்டக்காரர்களை உள்ளடக்கிய சிறந்த அணியை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில், இந்திய அணியிலிருந்து 6 பேர், நியூசிலாந்து அணியிலிருந்து 4 பேர் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியிலிருந்து 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணிக்கு நியூசிலாந்து வீரர் மிட்செல் சாண்ட்னர் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சிறந்த அணி விவரம்:
- ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து)
- இப்ராஹிம் ஸத்ரான் (ஆப்கானிஸ்தான்)
- விராட் கோலி (இந்தியா)
- ஸ்ரேயாஸ் ஐயர் (இந்தியா)
- கே.எல்.ராகுல் (இந்தியா)
- கிளன் பிலிப்ஸ் (நியூசிலாந்து)
- அஸ்மதுல்லா ஓமர்ஸாய் (ஆப்கானிஸ்தான்)
- மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்) (நியூசிலாந்து)
- முகமது ஷமி (இந்தியா)
- மாட் ஹென்றி (நியூசிலாந்து)
- வருண் சக்கரவர்த்தி (இந்தியா)
- அக்ஷர் படேல் (இந்தியா)
இந்த அறிவிப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது.
English Summary
Champion Trophy 2025 ICC Dream 11 team