#BREAKING | பிரதமர் மோடிக்காக சந்திரபாபு நாயுடு செய்த செயல்! தள்ளிப்போகும் பதவியேற்பு?!
Chandrababu naidu andhrapradesh electionresults 2024
ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரை சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றது.
மேலும் அதன் கூட்டணி கட்சிகளான ஜனசேனா 21 இடங்களிலும், பாஜக எட்டு இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆளுங்கட்சியாக இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்தது.
இதனையடுத்து ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக வருகின்ற ஒன்பதாம் தேதி பதவி ஏற்க உள்ளதாக என்ற தகவல் வெளியாகிது.
இதற்கிடையே, பாஜக தலைமையில் முதிய மத்திய அமைச்சரவையில் தெலுங்கு தேசம் இணைவது உறுதியானது. இதன் காரணமாக அமைச்சர் பதிவை யாருக்கு வழங்கலாம் என்பது குறித்து தனது கட்சியின் எம்பிக்கள் உடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற எட்டாம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளதால், சந்திரபாபு நாயுடு வருகின்ற 12ஆம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் பதவி ஈர்ப்பை முன்னிட்டு சந்திரபாபு நாயுடு தனது பதவியேற்பு விழாவை தள்ளிப் போட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
English Summary
Chandrababu naidu andhrapradesh electionresults 2024