அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு... ரேவந்த் ரெட்டிக்கு சந்திரபாபு நாயுடு திடீர் கடிதம்!
Chandrababu Naidu letter to Revanth reddy
ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இரண்டு மாநிலங்களுக்கும் இடையே பிரச்சனைகள் தொடர்கதையாக உள்ளது.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தெலுங்கானா, காங்கிரஸ் கட்சி முதல் மந்திரி ரேவன் ரெட்டிக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,
நமது மாநிலங்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தில் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளை மிகவும் இணக்கமாக தீர்க்க வேண்டியது நமது அவசியம். வருகின்ற 6 ஆம் தேதி பிற்பகல் சந்தித்து பேச விரும்புகிறேன்.
இந்த சந்திப்பு பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் எனவும் நான் நினைக்கிறேன். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு பரஸ்பர நன்மைகளையும் பயக்கும் தீர்வுகளை நாம் அடைய இருவரும் சேர்ந்து உழைக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது ரேவன் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தார். மேலும் அவர் சந்திரபாபு நாயுடுவின் நெருங்கிய உதவியாளராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜக கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் முதல் மந்திரி ரேவன் ரெட்டியை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Chandrababu Naidu letter to Revanth reddy