கோவில் திருவிழாவில் பொதுமக்கள் மீது சாய்ந்த தேர்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


கோவில் திருவிழாவில் பொதுமக்கள் மீது தேர் சரிந்து விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியில் உள்ள சன்னப்பனபுரா கிராமத்தில் வீரபத்ரேஸ்வரா என்ற கோவில் உள்ளது. இந்த நிலையில் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு கோவிலின் தேர் வீதியில் ஊர்வலம் வந்தது.

 திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் எண்ணிக்க அதிகமாக இருந்ததால் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் தேர் கோவிலை சுற்றி வந்த சிறிது நேரத்தில் தேரில் சக்கரம் உடைந்து தலை குப்புற சரிந்து விழுந்தது.

இந்த தேர் கவிழ்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக  பக்தர்கள் யாருக்கும் பெரிய அளவிலான காயம் ஏற்படவில்லை. தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chariot collapse on public in temple festival in Karnataka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->