சென்னை விமான நிலையத்தில் நெரிசலில் சிக்கிக்கொண்ட தமிழிசை சவுந்தர்ராஜன்.! - Seithipunal
Seithipunal


விமான நிலையங்களை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடு முனையங்களுக்கு வந்து செல்லும் மக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு ரூ. 230 கோடி மதிப்பீட்டில் ஆறு அடுக்குகள் கொண்ட அதிநவீன வாகனங்கள் நிறுத்துமிடம் கட்டப்பட்டது. 

இது, கடந்த ஆகஸ்ட் மாதமே நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்தது. அதன் படி, விமான நிலையத்திற்கு வந்த வாகன ஓட்டிகள் டோக்கன் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 

இதனால், வாகன ஓட்டிகளுக்கும், கட்டண சாவடி ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதனால், சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 

அந்த நேரத்தில் தூத்துக்குடிக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த தெலுங்கானா மாநிலத்தின் கவர்னரும், புதுச்சேரியின் துணை நிலை கவர்னருமான தமிழிசை சௌந்தரராஜன் கூட்ட நெரிசலில் சிக்கி கொண்டார். இதையறிந்த போக்குவரத்து காவலர்கள் கவர்னர் செல்வதற்கு மாற்று பாதையை ஏற்படுத்தி கொடுத்து, விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai airport trafic telungaana governor stuk


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->