வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500... நாளை முதல் அமல்...! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தில் 2023-24 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை சட்டப்பேரவையில் முதலமைச்சர் பூபேஷ் பாகெல், கடந்த 6ஆம் தேதி தாக்கல் செய்தார். இதில் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் 2 ஆயிரத்து 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். இதற்காக பட்ஜெட்டில் ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பதாரர்,

• அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து குறைந்தபட்சம் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

• குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். 

• விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டு.

• சத்தீஸ்கரின் ஏதேனும் ஒரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பு வழிகாட்டுதல் மையத்தில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் பதிவு செய்திருக்க வேண்டும்.

• மேலும் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு உறுப்பினர் மட்டுமே மாதாந்திர உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chhattisgarh Government To Give Unemployment Allowance Of Rs 2500 Per Month From tomorrow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->