பென்ஷன் திட்டத்தை அரசு ஊழியர்களே தேர்வு செய்யலாம்.. அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2003ஆம் ஆண்டு மத்திய அரசு பழைய ஓய்வுது திட்டத்தை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த 2006ம் ஆண்டு முதல் மத்திய அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு குறைவான சலுகைகள் கிடைப்பதால் மத்திய மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரவேண்டும் என மத்திய மாநில அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்தின. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கிஷான்ராவ் கரத் "மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர சாத்தியமில்லை" என பதில் அளித்தார்.

இந்த நிலையில் சட்டீஸ்கர் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் அரசு ஊழியர்கள் பழைய மற்றும் புதிய ஓய்வூதிய திட்டங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் நேரடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chhattisgarh govt employees can choose pension scheme


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->