800 பேர் களமிறங்கிய ஆபரேஷன்..சத்தீஸ்கரில் பதற்றம்! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தின் வனப்பகுதியில் நக்ஸலைட்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இதனால் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. சத்தீஸ்கர் மாநில போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து இந்த தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர் மாவட்டத்தில் தான் இந்த மிகப்பெரிய சம்பவம் நேற்று (மே 23) நடந்துள்ளது. மேலும் இத்தாக்குதலில் மொத்தம் 800 போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் இந்த மிகப்பெரிய ஆபரேஷனை நடத்தியுள்ளனர். இதில் 7 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர், பிஜப்பூர், தண்டேவாடா ஆகிய மாவட்டங்களின் வனப்பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த கூட்டுத் தாக்குதலில் நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதோடு, பலரும் படுகாயமடைந்துள்ளனர். பாதுகாப்பு படையினரின் தாக்குதலுக்கு நக்ஸலைட்டுகளும் பதிலடி கொடுத்து வருவதால் அங்கு தொடர்ந்து இரு தரப்பினருக்கும் தாக்குதல் நடந்து வருகிறது.

இதனால் சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும் தற்போது மக்களவைத் தேர்தல் நடந்து வரும் நிலையில், இந்த மிகப்பெரிய என்கவுன்ட்டர் தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், ஒரு பதட்டத்தையும் உருவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chhattisgarh naxalite operation 800 Soldiers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->