மும்பை | பலியான 17 பேரில் இருவர் தமிழர்கள் - முதல்வர் ஏக்நாத் வெளியிட்ட அறிவிப்பு.!
chief minister eknath shinde financial announce to crane falling died peoples family
மஹாராஷ்டிராவில் கட்டுமானப் பணியின்போது உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் - முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் சர்லம்பி கிராமத்தில் சாலை அமைப்பதற்கான மேம்பாலம் கட்டும்பணிகள் நடைபெற்று வந்தன. இந்த மேம்பாலத்தின் பாகங்களை தூக்கி வைக்க ராட்சத கிரேன் எந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
அப்போது கிரேன் எந்திரம் திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ராட்சத கிரேன் விழுந்து உயிரிழந்த 17 பேரில் இரண்டு பேர் தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் திருவள்ளூரை சேர்ந்த கண்ணன் உள்ளிட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:-
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும். விபத்து குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடபட்டுள்ளது. மேலும் துறையின் அமைச்சர், அதிகாரிகள் சமபவ இடத்தில் உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
chief minister eknath shinde financial announce to crane falling died peoples family