பீகார் : கங்கை ஆற்றில் உடைந்து விழுந்த பாலம் - விசாரணைக்கு உத்தரவிட்டார் முதல்வர்.!!
chief minister nitish kumar order to investigation of bridge broke in gangai river
பீகார் : கங்கை ஆற்றில் உடைந்து விழுந்த பாலம் - விசாரணைக்கு உத்தரவிட்டார் முதல்வர்.!!
பீகார் மாநிலத்தில் உள்ள பாகல்பூர் நகரில் கங்கை நதியின் குறுக்கே ரூ.1717 கோடி செலவில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பாலத்தின் இரண்டு பகுதிகள் இன்று மாலை திடீரென உடைந்து ஆற்றில் விழுந்தது.
இந்த விபத்து ஏற்பட்ட போது யாராவது வேலை செய்துகொண்டிருந்தார்களா? என்பது தெரியவில்லை. இந்த விபத்து குறித்து தகவலறிந்த முதல்வர் நிதிஷ் குமார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும், தரமற்ற வகையில் பாலம் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட புயல் காரணமாக பாலம் சேதமடைந்ததால் ககாரியா, அகுவானி மற்றும் சுல்தாங்கஞ்ச் பகுதிகளுக்கிடையே கங்கை நதியில் பாலத்தின் மையப்பகுதி கட்டப்பட்டு வந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையில் தற்போது மீண்டும் பாலம் இடிந்து விழுந்ததால் முதல்வர் நிதிஷ் குமார் மீது பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
English Summary
chief minister nitish kumar order to investigation of bridge broke in gangai river