சோகம்... அயோத்தி ராமர் கோயில் தலைமைப் பூசாரி இன்று காலமானார்!  - Seithipunal
Seithipunal



அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரிகளில் ஒருவரான ஆச்சாரியா லக்ஷ்மி காந்த் தீக்ஷித் (வயது 86) இன்று காலை காலமானார். 

அயோத்தியில் மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பூஜைகள் அனைத்தையும் தலைமை ஏற்று நடத்தியவர் இவர். 

இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் கவலைக்கிடமாக இருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்து விட்டார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

இவரது இறுதி சடங்குகள் கங்கை ஆற்றங்கரையோரம் மணிகர்ணிகா படித்துறையில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா, சோலாப்பூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவரது மறைவிற்கு உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஆச்சார்யா லக்‌ஷ்மிகாந்த் தீக்ஷித்யின் மறைவு ஆன்மீக உலகத்திற்கும் இலக்கிய உலகத்திற்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும். 

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினரைக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மாவுக்கு பகவான் ஸ்ரீ ராமனின் பாதங்களில் புகழிடம் அளிக்க பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chief Priest Ayodhya Ram Temple passed away 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->