இந்திய பத்திரிகையாளரை நாட்டை விட்டு வெளியேற சீனா உத்தரவு...! - Seithipunal
Seithipunal


லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இருநாட்டு உறவுகளுக்கிடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே இந்தியா, சீனா உறவை புதுப்பிக்கும் முயற்சியாக கடந்த மே மாதம் கோவாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் 2 சீன பத்திரிக்கையாளர்களுக்கு தற்காலிக விசா வழங்கப்பட்டது.

இதையடுத்து பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக 2 சீன பத்திரிகையாளர்களின் விசாவை இந்தியா புதுப்பிக்க மறுத்தது. இதனால் இந்தியாவில் தற்போது செயல்படும் சீன பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்நிலையில் இந்திய நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவில் பணியாற்றி வரும் 4 இந்திய பத்திரிகையாளர்களின் விசாவை சீன அரசு புதுப்பிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து 3 பத்திரிகையாளர்களின் விசா காலம் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் அவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். 

இதையடுத்து எஞ்சியிருக்கும் பிடிஐ செய்தி பத்திரிகையாளருக்கும் இந்த மாதம் விசா காலம் முடிவடையவுள்ள நிலையில், அவரை சீனாவிலிருந்து வெளியேற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் சீனாவில் இந்திய பத்திரிகையாளர்கள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே இருநாட்டின் தூதரகங்களும், வெளியுறவுத்துறை அமைச்சர்களும் பத்திரிகையாளர்கள் அனுமதி விவகாரத்தில் கலந்து ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China orders Indian journalist to leave the country


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->