வாக்குச்சாவடியில் மோதல்.. முகவர்களின் மண்டை உடைப்பு.. ஆந்திராவில் பதற்றம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திராவில் நாடாளுமன்ற பொது தேர்தலுடன் சட்டமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. ஆந்திராவில் மும்முனைப் போட்டி நிலவுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

ஆந்திராவைப் பொறுத்தவரை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் நிலையில் தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா கட்சிகள் ஒரு கூட்டணியும், காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் ஒரு கூட்டணியும் அமைத்து களம் கண்டுள்ளன. 

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே மச்சார்லா தொகுதியில் தெங்குதேசம் கட்சி நிர்வாகிகளுக்கும் ஓ எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த தொகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி ஒன்றில் இரு கட்சி வாக்குச்சாவடி முகவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறி இரு கட்சிகளை சேர்ந்த சில நிர்வாகிகளின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. 

இதனை அடுத்து வாக்குப்பதிவு மையத்தில் இருந்த அவர்களை போலீசார் வெளியேற்றிய பிறகு மாற்று முகவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Clash between TDP and YSR Congress cadres


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->