டெல்லி: திருடனால் கொல்லப்பட்ட உதவி சப்-இன்ஸ்பெக்டர்.! ரூ.1 கோடி நிதியுதவி அறிவிப்பு - Seithipunal
Seithipunal


டெல்லி கியாலா காவல் நிலையத்தில் ஜனவரி 4ஆம் தேதி, பெண் ஒருவர் தனது மொபைல் போனைத் திருடிய ஒரு நபர் குறித்து புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த, உதவி சப் இன்ஸ்பெக்டர் ஷம்பு தயாள்(57) தீவிரமாக செயல்பட்டு மொபைல் போனை அனீஷ் என்ற நபரை கைது செய்தார். 

இதையடுத்து அனிஷை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தபோது திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் அனீஸ், உதவி சப் இன்ஸ்பெக்டரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் தொண்டை, மார்பு மற்றும் கழுத்தில் கத்தியால் குத்தியதால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷம்பு தயாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் கத்தியால் குத்தப்பட்டபோதும் செல்போன் திருடரை ஷம்பு தயாள் விடாமல் மடக்கி பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் திருடரைப் பிடிக்க போராடி வீரமரணம் அடைந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஷம்பு தயாளின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்குவதாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM announced 1 crore financial assistance for Assistant sub inspector killed by thief in delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->