ஒடிசா சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு! மேற்குவங்க முதல்வர் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மற்றும் ஹூக்ளி மாவட்டங்களைச் சேர்ந்த 65கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து, ஒடிசா கந்தமாள் மாவட்டத்தில் உள்ள துர்காபிரசாத் கிராமத்திற்கு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப்படையினர் காயமடைந்த 40க்கும் மேற்பட்ட அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் காயமடைந்தவர்களில் 15 பேரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த எங்கள் குடிமக்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மேலும் காயமடைந்த பலர் உயிருக்கு போராடி வருகின்றனர்.

இறந்தவர்களின் விரைவான பிரேத பரிசோதனை, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை மற்றும் அவர்கள் வீடு திரும்ப உதவுவதற்காக மேற்குவங்க நிர்வாகம், ஒடிசா அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்கிறது என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM mamta condolence odisha bus accident death


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->