எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் தமிழனுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் தமிழனுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து.!

சென்னை கோவளம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் பச்சை என்ற இளைஞர், கடந்த 19ம் தேதி அதிகாலை சுமார் 5.30 மணியளவில் 8850 மீட்டர் உயரமுடைய எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து பாதுகாப்பாக திரும்பியுள்ளார். இதன் மூலம் அந்த இளைஞர் எவரெஸ்ட் சிகரத்தை கொண்ட முதல் தமிழன் என்ற பெருமையை பிடித்துள்ளார். 

இவர் அலை சறுக்கு போட்டிகளில் சர்வதேச அளவில் பல வெற்றிகளைக் குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பல்வேறு விளையாட்டுகளில் நம் இளைஞர்கள் முத்திரை பதித்து நம்மையும் தமிழ்நாட்டையும் பெருமிதம் அடையச் செய்கிறார்கள். 

அந்த வகையில் கோவளம் பகுதியைச் சேர்ந்த இராஜசேகர் பச்சை என்ற இளைஞர் உலகின் மிக உயரிய எவரெஸ்ட் சிகரத்தைத் தன் விடாமுயற்சியினாலும், கடின உழைப்பாலும் ஏறி அடைந்துள்ளார் என்ற செய்தியை அறிந்து மகிழ்ந்தேன். அவருக்கு என்னுடைய பாராட்டுகள்" என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm mk stalin wishes to rajasekar pachai for everest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->