கோகோ-கோலா குடித்த காவல் ஆய்வாளருக்கு.. நூதன தண்டனை விதித்த நீதிபதி.!
Coca Cola drunk police inspector different judgement
குஜராத் மாநிலத்தில் ஆன்லைன் விசாரணையின்போது காவலர் ஒருவர் கோகோ கோலா அருந்தியதற்கு நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக குஜராத்தில் நீதிமன்ற வழக்குகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் சாலையில் இரு பெண்களை காவலர்கள் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு ஆன்லைன் மூலம் விசாரணைக்கு வந்தது.
அதில் காணொளியில் காவல் ஆய்வாளர் ரத்தோட் என்பவரும் கலந்து கொண்டார். அப்போது விசாரணையின்போது அவர் கையில் கோகோ-கோலா கேன் வைத்து குடித்து கொண்டிருந்துள்ளார். இதைப் பார்த்து கடுப்பான நீதிபதி அரவிந்த் குமார், ரத்தோடை கண்டித்துள்ளார்.
மேலும், காவல் ஆய்வாளர் ரத்தோட் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு 100 கோகோ கோலா வாங்கி தர வேண்டுமென்றும் அதை செய்யாத பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நூதன தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Coca Cola drunk police inspector different judgement