கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை! கல்லூரி முதல்வர் ராஜினாமா! - Seithipunal
Seithipunal


கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி நிலையில் கல்லூரி முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்த பெண் சமீபத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த கொலைக்கு காரணமாணவர்களை விரைவாக கைது செய்யக்கோரி பயிற்சி மருத்துவர்கள் அனைவரும் போராட்டம் நடத்தியதால் பெரும் பதற்றமான சூழல் ஈடுபட்டது. அதனைத் தொடர்ந்து இந்த கொலை வழக்கு சம்பந்தமாக சஞ்சய் ராய் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனை வளாகத்தில் சிபி போலீஸ் எனப்படும் காவல்துறைக்கு உதவிகளை செய்யும் அங்கீகரிக்கப்பட்ட நபராக பணியாற்றி வந்தவர் சஞ்சய் ராய். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சஞ்சயின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். 

பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் மேற்கு வங்க போலீசார் கைது செய்ய வேண்டும் இல்லை என்றால் இந்த வழக்கு சிபிஐ ஒப்படைக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

இந்த நிலையில் பெண் மருத்துவர் கொலை விவகாரம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து அக்கல்லூரி முதல்வர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

College principal resigns over Kolkata woman doctor murder case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->