மத்திய அமைச்சர் பெயரில் ஆபாச வீடியோ - விசாரணையில் சிக்கிய கல்லூரி மாணவர்.!  - Seithipunal
Seithipunal


மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சராக இருப்பவர் நடிகர் சுரேஷ் கோபி. இவரது பெயரில் ஆபாச பேச்சுடன் கூடிய வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ அரசியல் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து திருச்சூர் மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் ஹரி, பீச்சி போலீசில் புகார் கொடுத்தார். அதன் படி போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் காட்டூர் அருகே கீழுப்பள்ளிக்கரா பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஷியாம் என்பவர் மத்திய அமைச்சர் பெயரில் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. 

சமீபத்தில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பீச்சி பகுதிக்கு வந்த போது அவரும், ஹரியும் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். இந்த வீடியோவை ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் ஷியாமை கைது செய்தனர். மத்திய அமைச்சர் பெயரில் ஆபாச வீடியோ சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

college student arrest for obscene vedio uplode union minister name


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->