சாம்பாரில் செத்து கிடந்த எலியால் கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சி..!! - Seithipunal
Seithipunal


மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிமாற வைத்திருந்த சாம்பாரில் எலி இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலம் ஹாப்பூர் நகரில் உள்ள ரமா மருத்துவக் கல்லூரியில் உள்ள உணவகத்தில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு பரிமாற சாதம், சாம்பார், புளி குழம்பு உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த உணவு பரிமாற தயாரான பொழுது சாம்பாரில் ஒரு முழு எலி செத்து மிதந்ததை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சாப்பிடவிருந்த சாம்பார் எலி செத்து கிடந்தது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் சாம்பாரில் எலி கிடந்ததை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்த மாணவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

College students shocked by dead rat in sambar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->