ம.பியில் பரபரப்பு - மணப்பெண்ணுக்கு வழங்கப்பட்ட மேக்கப் கிட்டில் கருத்தடை மாத்திரை.!
condoms and birth control pills to new wedding couples in madhya pradesh
ம.பியில் பரபரப்பு - மணப்பெண்ணுக்கு வழங்கப்பட்ட மேக்கப் கிட்டில் கருத்தடை மாத்திரை.!
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அரசு சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவசமாக திருமணம் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், இன்று தண்ட்லா பகுதியில் 296 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்தத் திருமண விழாவில் மணப்பெண்களுக்கு மேக்கப் கிட் பரிசாக வழங்கப்பட்டது.
அதில் ஆணுறைகளும், கருத்தடை மாத்திரைகளும் இருந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மேக்கப் கிட்டை மத்தியப் பிரதேச சுகாதாரத் துறை அதிகாரிகள் வழங்கியிருக்கலாம்.
குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக இவ்வாறு தந்திருக்கலாம். மாவட்ட நிர்வாகம் தரப்பில் மணமக்களுக்கு மேக்கப் கிட் வழங்கப்படவில்லை.
அதில் இருந்த ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. முதலமைச்சரின் திருமண திட்டத்தின்கீழ், பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக 49,000 ரூபாய் வரவு வைக்கிறோம்.
ஆறாயிரம் ரூபாய் மதிப்புள்ள உணவு, தண்ணீர் மற்றும் ஒரு கூடாரத்தை வழங்கும் பொறுப்பை மாவட்ட நிர்வாகம் ஏற்றுள்ளது. ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பாக்கெட்டுகளில் என்ன இருந்தது என்று எங்களுக்கு தெரியாது' என்று மாவட்ட மூத்த அதிகாரி ராவத் தெரிவித்தார்.
English Summary
condoms and birth control pills to new wedding couples in madhya pradesh