எம்.எல்.ஏ.க்களை வெளிமாநிலங்களுக்கு அழைத்து செல்லும் திட்டத்தை ரத்து செய்த காங்கிரஸ் - காரணம் என்ன?
congrass cancel plan sending mlas other states
எம்.எல்.ஏ.க்களை வெளிமாநிலங்களுக்கு அழைத்து செல்லும் திட்டத்தை ரத்து செய்த காங்கிரஸ் - காரணம் என்ன?
கடந்த மாதம் 10 ஆம் தேதி நடைபெற்ற கர்நாடகா சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி மாநிலத்தின் பல தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றியும், முன்னிலையும் பெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து பாஜக, ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் சில இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை வெளிமாநிலங்களுக்கு அழைத்து செல்லும் திட்டத்தை ரத்து செய்துள்ளது.
அதற்கு பதில், எம்.எல்.ஏ.க்களை பெங்களூரில் உள்ள ஒரு ஓட்டலில் இன்று இரவு தங்க வைத்து, நாளை ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அமைச்சரவை குறித்து இன்று இரவு உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்தவும் முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த லஷ்மன் சவதிக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்றும், ஜெகதீஷ் ஷெட்டருக்கு மேலவை உறுப்பினர் பதவி வழங்க வாய்ப்பு உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
congrass cancel plan sending mlas other states