புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் நினைவிடத்தில் ராகுல்காந்தி அஞ்சலி.! - Seithipunal
Seithipunal


காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் சென்றுகொண்டிருந்தது. 

அப்போது, பயங்கரவாதிகள் தற்கொலைப்படையினர் பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதச்செய்து தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு படையினர் நாற்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இந்த தாக்குதலை பாகிஸ்தான் நாட்டில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதம் என்ற அமைப்பு நடத்தியது. இதைத் தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அந்தப் பகுதியை மத்திய அரசு தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. 

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணம் என்னும் பாரத் ஜடோஜாவை தமிழ்நாட்டின் கடைக்கோடி எல்லையான கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை நடைபெற உள்ளது. 

இந்த பாத யாத்திரை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வருகிற 30-ம் தேதி காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் தேசியக்கொடி ஏற்றிய பின்னர் நிறைவடைய உள்ளது. 

இந்த நிலையில், இன்று பாதயாத்திரை காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் புல்வாமா தாக்குதலில் வீரர்கள் வீரமரணமடைந்த இடத்தில் ராகுல்காந்தி மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congrass leader ragulgandhi tribute in pulwama attack soldiers memorial place


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->