#குஜராத் :: வாக்கு எண்ணும் மையத்தில் தற்கொலைக்கு முயன்ற காங்கிரஸ் வேட்பாளர்..!! - Seithipunal
Seithipunal


குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்ற வருகிறது. மத்தமுள்ள 182 இடங்களில் 152 இடங்களுக்கு மேல் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 20 இடங்களிலும், ஆம் ஆத்மி 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தின் காந்திதாம் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பாரத் சோலாங்கி என்பவர் மதோமோஜானி வாக்கு எண்ணும் மையத்தில் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக சீல் வைக்கப்படாத நிலையிலும், சில மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கையெழுத்து இல்லாமல் இருந்ததாக காங்கிரஸ் வேட்பாளர் பாரத் சோலங்கி குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சரி வர பதிலளிக்காததால் அவர் அங்கேயே அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அவர் ஆர்ப்பாட்டம் நடத்தியும் அதிகாரிகள் அவரை கண்டுகொள்ளாததால் வாக்கு எண்ணும் மையத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress candidate tried to commit suicide at counting center


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->