ஒரே கருத்துள்ள கட்சிகளுடன் மட்டுமே மீண்டும் கூட்டணி.. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இதில், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களை தேர்வு செய்யும் அதிகாரம் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் கூட்டணி குறித்து உறுதி செய்யப்படும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ராகுல் காந்தி பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில்,

கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கட்சி சிறந்த தலைமையை வழங்கியது. தீர்க்கமான தலைமைக்கான ஒரே மாற்றாக அது மட்டும் இருக்க முடியும். அதேபோல் ஒரே கருத்துள்ள கட்சிகளுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதை காங்கிரஸ் விரும்புகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress leader mallikarjuna kharge speech parliament alliance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->