தி. மலை || பேச மறுத்த காதலி - கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை.!
college student sucide in thiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொண்டமானூர் கிராமத்தை சேர்ந்தவர் சுதேசி. இவர், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு விக்டோரியா ஆண்கள் விடுதியில் தங்கியிருந்து, மாநில கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர், நேற்று முன்தினம் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றுவிட்டு விடுதியில் உள்ள தனது அறைக்கு திரும்பி வந்தார். அறையில் யாரும் இல்லாத நேரத்தில் சுதேசி, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுதேசி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சுதேசி தனது சொந்த ஊரில் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததும், கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் சுதேசியிடம் சரியாக பேசாததால் ஏற்பட்ட விரக்தியில் சுதேசி தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இருப்பினும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
English Summary
college student sucide in thiruvannamalai