#Breaking :: சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி..!!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தற்பொழுது பாரத ஒற்றுமை யாத்திரை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இவருடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ராகுல் காந்தியின் தாயாருமான சோனியா காந்தி சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற யாத்திரை பயணத்தில் கலந்து கொண்டார். இந்த நிலையில் இன்று டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சோனியா காந்தி வழக்கமான உடல் பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. சோனியா காந்தி சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக வெளிநாடு சென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress leader Sonia Gandhi admitted in Delhi hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->