சோனியா காந்தி வீட்டில் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை! நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த ஆண்டு கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதைப் போலவே ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளன. இதனையடுத்து 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதன் தலைமையில் கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறது. அதே நேரத்தில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவிற்கு எதிராக மூன்றாவது அணி அமைவதை தடுத்து, காங்கிரஸ் தலைமையில் மிகப் பெரிய கூட்டணியை ஏற்படுத்தும் முயற்சியில் பிரஷாந்த் கிஷோர் ஈடுபட்டு வருகிறார். இதன் முயற்சியாக தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவரது வீட்டில் தங்கியிருந்து பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ஏ.கே.ஆந்தோனி, ஜெய்ராம் ரமேஷ், ப.சிதம்பரம், கமல்நாத் உள்ளிட்டோர் டெல்லியில் சோனியா காந்தியின் வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டனர். காங்கிரசில் உள்ள உட்கட்சி விவகாரம், நடப்பு அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கவும், ராஜஸ்தானில் அடுத்த மாதம் காங்கிரஸ் கட்சி மாநாடு நடைபெற இருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேர்தல் வியூக வல்லுனரான பிரஷாந்த் கிஷோர், 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் வியூக பணிகளை மேற்கொள்ள உள்ளார்.

அதேப்போல, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் சந்திர சேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு தேர்தல் பணியாற்ற இருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress leaders discussed with Sonia Gandhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->