பாஜக அரசின் ஊழல் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்!  - Seithipunal
Seithipunal


கடந்த 18 ஆண்டுகால பாஜக ஆட்சியில், மத்திய பிரதேசத்தில் நடந்ததாக குற்றம் சாட்டும் ஊழல்களின் பட்டியலை நேற்று காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 

ஊழலை வெளியிட்டு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் கமல் நாத் தெரிவித்திருப்பதாவது, ''முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தலைமையிலான பாஜக ஆட்சி காலத்தில் மத்திய பிரதேசத்தில் கடந்த 18 ஆண்டு காலமாக நடந்த ஊழலில் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. 

50 சதவீதம் லஞ்சம் பெரும் பாஜக அரசால் மத்திய பிரதேசம் ஊழல் மாநிலமாக மாறியுள்ளது. கூகுளில் ஊழல் என பதிவிட்டு தேடினால் அதில் முதல்வர் சிவராஜ் புகைப்படம் வரக்கூடிய நாள் தொலைவில் இல்லை'' என தெரிவித்தார்.

காங்கிரஸ் வெளியிட்ட பட்டியலில் வியாபாரம், மின்னணு ஒப்பந்த ஊழல், சட்டவிரோத சுங்க ஊழல், மண்டல போக்குவரத்து அலுவலக ஊழல், மதுபான ஊழல், மின்சார துறை ஊழல் உள்ளிட்ட 254 ஊழல்கள் குற்றச்சாட்டுகளில் இடம்பெற்றுள்ளன. 

கடந்த 2005 முதல் 2018 வரை மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து மூன்று முறை முதல்வராக சிவராஜ் சிங் செளஹான் பதவியேற்றார். 

மொத்தமுள்ள 230 தொகுதிகளில் கடந்த 2018 பேரவை தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி பெற்றது மீதமுள்ள 109 இடங்களே பாஜகவுக்கு கிடைத்தன. 

இதனை அடுத்து காங்கிரஸ் கமல்நாத் தலைமையில் ஆட்சி அமைத்தது. ஆனால் 15 மாதங்களில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்து மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தது. 

மாநில பாஜக தலைவர் விஷ்ணு தத் சர்மா காங்கிரஸின் குற்றச்சாட்டு குறித்து தெரிவிக்கையில், ''ஊழல்களின் தலைவர் கமல் நாத். அவரின் செயல் திட்ட மாதிரியை அனைவரும் நன்றாக அறிவர். 

சீக்கியர்களுக்கு கடந்த 1984 ஆம் ஆண்டு கலவரம் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் எதுவும் இல்லை. காங்கிரஸ் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் எந்த உண்மையையும் கிடையாது'' என்றார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress released the corruption list of the BJP government


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->