#ஆப்ரேஷன் லோட்டஸ் :: காங்கிரஸ் கட்சிக்கு பயம் காட்டும் பாஜக..!! வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ராஜஸ்தானுக்கு இடம் மாற்றம்..!!
Congress transfer Himachal Pradesh candidates to Rajasthan
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 68 தொகுதியில் கொண்ட ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முடிவில் காங்கிரஸ் பாஜகவுக்கு இடையே இழுபறி நீடித்து வருகிறது. இதன் காரணமாக காங்கிரஸ் வேட்பாளர்களை விலை கொடுத்து வாங்க பாஜக முயற்சிக்கும் என்பதால் முன்னிலை வகிக்கும் அனைத்து வேட்பாளர்களையும் பாதுகாக்கும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.
இதன் காரணமாக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஸ் பாகல் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவரான பூபேந்திர சிங் ஆகியோர் வெற்றி பெறும் வாய்ப்புள்ள வேட்பாளர்களை ராஜஸ்தானுக்கு முன்கூட்டியே பஸ் மூலம் இடமாற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனிப்பட்ட முறையில் இதனை தீவிரமாக கண்காட்சி வருவதாக சொல்லப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 வேட்பாளர்கள் வெற்றி பெற்ற நிலையில் 28 வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
English Summary
Congress transfer Himachal Pradesh candidates to Rajasthan