ஸ்விக்கி நிறுவனத்திற்கு அபராதம் - நடந்தது என்ன?
consumer court fine to swiggy company for not delivery to ice cream
ஆன்லைன் மூலம் உணவு வழங்கும் சேவையைச் செய்து வரும் நிறுவனங்களில் ஒன்றான ஸ்விக்கி நாடு முழுவதும் எண்ணற்ற கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஸ்விக்கி ஆப் மூலம், 'நட்டி டெத் பை சாக்லேட்’ என்ற வகையான ஐஸ்கிரீமை ஆர்டர் செய்துள்ளார்.
இதற்காக அவர், ரூ.187 யும் செலுத்தியுள்ளார். ஆனால் பணத்தைப் பெற்றுக்கொண்ட ஸ்விக்கி, ஐஸ்கிரீமை அவருக்கு டெலிவரி செய்யவில்லை. ஆனால் ஸ்விக்கி ஆப்பில் டெலிவரி செய்யப்பட்டதாக ஸ்டேட்டஸ் போடப்பட்டிருந்தது.
இது குறித்து ஸ்விக்கி நிறுவனத்திடம் அந்தப் பெண் கேட்டபோது ஐஸ்கிரீமுக்கான பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதையடுத்து அந்த பெண் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் ஸ்விக்கி நிறுவனத்துக்கு ரூ.5,000 தரவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
English Summary
consumer court fine to swiggy company for not delivery to ice cream