இனி 5 நாட்டு பயணிகளுக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை - மத்திய அரசு அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


சீனாவில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. தினசரி பாதிப்பு 10 லட்சமாக இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தீவிர படுத்த அறிவுறுத்தியுள்ளது. 

இதன் காரணமாக சீனா உட்பட 5 நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் விமான பயணிகள் அனைவரும் கொரோனா சோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பல்வேறு மாநிலங்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் மான்வியா கூறுகையில் "சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு அறிகுறி அல்லது கொரோனா பாதிப்பு உறுதியானால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona test mandatory for travelers from 5 countries


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->