பெற்றோர்களே உஷார்.. குழந்தைகளைக் குறி வைக்கும் புதிய வகை XBB.1.16 வைரஸ்..!!
Corona XBB that affects children the most
புதிய வகை கொரோனா குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என மருத்துவ நிபுணர் எச்சரிக்கை..!!
இந்தியா முழுவதும் மீண்டும் கொரானா தொற்று வேகமாக அதிகரித்து வருவதால் புதிய வகை XBB.1.16 வகை கொரோனா குழந்தைகளை அதிகம் பாதிக்கும் எனவும் அதனால் ஏற்படும் சில அறிகுறிகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது ஆக்டர்ஸ் என அழைக்கப்படும் ஆரம்ப கால அறைகளில் காணப்படாத சில புதிய நோய்களையும் இணைத்துள்ளது.
இதனால் காய்ச்சல் அதிகமான சளி, இரும்பல் மற்றும் சீழ்பிடிப்பு இல்லாத சில முக்கிய அறிகுறிகள் தென்படும் என பிஜ்னூரில் உள்ள மங்களா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் குழந்தை நல மருத்துவர் விபின் எம் விசிஷ்டா தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் H3N2 வகை கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. பல மாதங்களாக கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் தற்பொழுது நாடு முழுவதும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து காணப்படுவதால் மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி உள்ளன.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த கொரோனா தொற்று பாதிப்பு தற்பொழுது 300ஐ தாண்டியுள்ளது. நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் சுயக்காட்டுப்பாட்டுடன் முக கவசம் அணிய வேண்டும் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.
English Summary
Corona XBB that affects children the most