நாளை விண்ணில் பாய்கிறது எல்.வி.எம்-3 ராக்கெட்.! கவுண்டவுன் தொடக்கம்..! - Seithipunal
Seithipunal


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ), அதிக எடை கொண்ட எல்.வி.எம்-3 ராக்கெட்டை நாளை காலை 9 மணிக்கு ஆந்திரமாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது. இதற்கான கவுண்டவுன் இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது.

43.5 மீட்டர் உயரமும், 643 டன் எடையும் கொண்ட எல்.வி.எம்-3 ராக்கெட், இங்கிலாந்தின் ஒன்வெப் நிறுவனத்திற்கு சொந்தமான 36 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. இந்த செயற்கை கோள்கள் வெள்ளி கிரகத்தின் மேற்பரப்பு வெப்பநிலை, வளிமண்டலம் மற்றும் எரிமலைகளின் செயல்பாடுகளை குறித்து ஆராய்வதற்காக அனுப்பப்படுகிறது.

எல்.வி.எம்-3 ராக்கெட்டின் கவுண்டவுன் இன்று காலை தொடங்கிய நிலையில், விண்ணில் செலுத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள், கவுண்டவுன் நேரத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை மற்றும் தட்பவெப்ப நிலை சரி பார்க்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Countdown starts as LVM 3 rocket to launch tomorrow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->