தானே: வீட்டு வாசலுக்கு அருகே செருப்பு... பக்கத்து வீட்டுக்காரரை கொன்ற தம்பதி.! - Seithipunal
Seithipunal


தானேவில் வீட்டு வாசலுக்கு அருகே செருப்புகளை வைத்ததற்காக தம்பதியினர், பக்கத்து வீட்டுக்காரரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தானேவின் நயா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்சர் காத்ரி (54). இவருக்கும் இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த தம்பதி ஒருவருக்கும், வீட்டு வாசல் அருகே செருப்புகளை வைப்பது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து நேற்று இரவு இவர்களிடையே மீண்டும் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இவர்களிடைய வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது.

இந்த சண்டையில், தம்பதியினர் தாக்கியதில் அப்சர் காத்ரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த நயா நகர் காவல் நிலைய போலீசார், வீட்டு வாசல் அருகே செருப்பு வைப்பதில் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை கொன்ற பெண்ணை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அந்தப் பெண்ணின் கணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Couple kills neighbour over placing slippers near door in thane


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->