ஓரினசேர்க்கை விவகாரம் - சூரஜ் ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் எச்.டி.ரேவண்ணா. இவர்களது மகன்கள் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் சூரஜ் ரேவண்ணா.

இதில், சூரஜ் ரேவண்ணா மீது வாலிபர் ஒருவர் ஓரினச்சேர்க்கை புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரையடுத்து சூரஜ் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் ஜாமின் கேட்டு, பெங்களூரு 42வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சூரஜ் ரேவண்ணா மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று நீதிபதி சிவகுமார் விசாரித்தார்.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரருக்கு ஜாமின் கொடுத்தால் சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்தி, சாட்சிகளை அழிக்க வாய்ப்புள்ளது. இதனால் அவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என்றுத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சூரஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தார். இந்த இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, சூரஜ் ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்க மறுத்து உதவிட்டுள்ளார்.

சமீபத்தில் பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவரது தம்பி சூரஜ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

court refusal sooraj revanna bail


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->