கொரோனா நிவாரணத் தொகை! 30 நாட்களுக்குள் தீர்வு காண உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


கொரோனா இறப்பு நிவாரணம் பெறும் விவகாரத்தில் 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா நிவாரணம் பெறுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதலின்படி, கடந்த 20-ஆம் தேதிக்கு முன்பாக கோரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 60 நாட்களுக்குள்ளும், 20ஆம் தேதிக்கு பிறகு நிகழ்ந்த கொரோனா  இறப்புகளுக்கு, இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள்ளும் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் மனுக்களை சமர்ப்பிக்க முடியாதவர்கள், மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்யலாம் என்றும், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு மனுக்களை பரிசீலனை செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா இறப்பு நிவாரணம் கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Covid relief fund


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->