அமர்நாத் யாத்திரை 2023: பக்தர்கள் எது குறித்தும் அச்சப்பட வேண்டாம் - சி.ஆர்.பி.எப்.
CRPF says Amarnath Yatra Devotees dont fear
தெற்கு காஷ்மீர் இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகை கோயில் அமைந்துள்ளது. இங்கு இயற்கையாக உருவாகும் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்தநிலையில் இந்த ஆண்டு செல்வதற்கான யாத்திரை, வரும் ஜூலை 1-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வரை நடக்க உள்ளது.
இந்தாண்டு யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு உணவு கட்டுப்பாடுகளை அமர்நாத் யாத்திரை வாரியம் அறிவித்துள்ளது. ஏனெனில், கடந்த வருடம் யாத்திரையின் போது, உடல் உபாதைகள், ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளால் 42 பக்தர்கள் உயிரிழந்தனர். இதனால் பக்தர்கள் அசைவ உணவு சாப்பிடக் கூடாது என்றும், மது, புகையிலை பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமர்நாத் யாத்திரை தொடங்க உள்ளதையொட்டி, யாத்திரைக்கு வரும் பக்தர்கள் எது குறித்தும் அச்சப்பட வேண்டாம் என மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. மேலும் காஷ்மீரில் முழுவீச்சில் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
English Summary
CRPF says Amarnath Yatra Devotees dont fear