அதை ஒப்புக் கொள்கிறாரா? செல்வப்பெருந்தகைக்கு தமிழிசை கேள்வி!
Does he admit it? Question to Selvaperunthagai
காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை.. தாங்கள் தற்போது பங்கெடுத்துக் கொண்டிருக்கும் திராவிட மாடல் திமுக கூட்டணியால் மட்டும் வெற்றி பெற்று விட முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறாரா? என கேள்வி எழுப்பியுள்ள தமிழிசை சவுந்தரராஜன்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைதமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவருடைய மாநாட்டில் மதவாத சக்திகளுக்கு எதிராக செயல்படுவோம் என்றார் ஆகவே அவர் எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ஒழித்துவிடலாம் என்றும் ஓரங்கட்டிவிடலாம் என்றும் ஆனால் இந்துத்துவா சக்திகளை, மதவாத சக்திகளை ஓரங்கட்ட வேண்டும் என்றால் விஜய் இந்தியா கூட்டணிக்கு வருவதே அவருக்கும் நல்லது அவருடைய இயக்கத்துக்கும் நல்லது எனசெல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்திருந்தார் . இதை நான் நாட்டின் குடிமகனாகச் சொல்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், செல்வப்பெருந்தகை விஜய்க்கு அழைப்பு விடுத்தது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை.. தாங்கள் தற்போது பங்கெடுத்துக் கொண்டிருக்கும் திராவிட மாடல் திமுக கூட்டணியால் மட்டும் வெற்றி பெற்று விட முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறாரா? என கேள்வி எழுப்பியுள்ள தமிழிசை சவுந்தரராஜன் ,விஜயை அழைப்பது விஜய் மீது இருக்கும் நம்பிக்கையினாலா? அல்லது தங்கள் கூட்டணிமீது இருக்கும் அவநம்பிக்கையினாலா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
Does he admit it? Question to Selvaperunthagai