5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு! மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டிலிருந்து மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே நடைபெற்று வந்த வன்முறை பல மாதங்களாக ஓய்ந்திருந்த நிலையில், திடீரென சமீபத்தில் வன்முறை மீண்டும் வெடித்தது. 

 

 

இதற்கிடையே மெய்தி இனமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாகும். பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மொய்ரெங் பகுதியில் உள்ள முன்னாள் முதல்-மந்திரி மைரெம்பாம் கொய்ரெங் வீட்டு வளாகத்தில் கடந்த 6-ம் தேதி ராக்கெட் குண்டு வீசப்பட்டதில், ஒருவர் உயிரிழந்தார்.

 

தொடர்ந்து மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த 7-ம் தேதி இரண்டு சமூகங்களைச் சேர்ந்த ஆயுதமேந்திய நபர்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 7 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

 

இந்த நிலையில், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவம், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளுக்கு மட்டும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Curfew in 5 districts People do not come out of their houses


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->