தலாய் லாமா தனது மதத்தை சுதந்திரமாக கடைபிடிக்கலாம் - வெளியுறவு அமைச்சகம் !! - Seithipunal
Seithipunal


சீனா பெய்ஜிங்கில் இருந்து வந்த ஒரு அறிக்கையில்  தலாய் லாமாவை அரசியல் நாடுகடத்தப்பட்டவர் என்று அழைத்தது. இதற்க்கு இந்தியா எதிர் வினையாற்றியது. தலாய் லாமா ஒரு மதிப்பிற்குரிய மதத் தலைவர் என்று இந்தியா கூறியது, அவர் இந்த இந்திய நாட்டில் தனது மத மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளை நடத்த சுதந்திரம் உள்ளது என தெரிவித்த்து.

புனித தலாய் லாமா பற்றிய இந்தியாவின் நிலைப்பாடு எப்போதும் தெளிவானது மற்றும் என்றும் நிலையானது. அவர் ஒரு மரியாதைக்குரிய மதத் தலைவர் மற்றும் இந்திய மக்களால் ஆழமாகவும், அன்பாகவும்  மதிக்கப்படுகிறார். அவரது மத மற்றும் ஆன்மிக நடவடிக்கைகளை மேற்கொள்ள அவருக்கு உரிய மரியாதைகளும் சுதந்திரமும் இந்த இந்திய நாட்டில் அளிக்கப்படுகிறது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

முன்னாள் அமெரிக்க சட்டமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனத் தலைமையை விமர்சிக்கும் போது தலாய் லாமாவை பாராட்டிய ஒரு நாள் கழித்து இந்த அறிக்கை வந்தது. இந்த மாதம் தர்மஷாலாவில் தலாய் லாமாவுடன் அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் தலாய் லாமாவை நேரில் சந்தித்தனர்.

ஹிமாச்சல் பிரதேசம் தர்மசாலாவுக்கு அமெரிக்க சட்டமன்ற பிரதிநிதிகள் வருகை தந்ததற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. 14வது தலாய் லாமா ஒரு தூய மத போதகர் அல்ல, மாறாக மதத்தின் போர்வையில் சீனாவுக்கு எதிரான பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அரசியல் நாடுகடத்தப்பட்டவர் என்பது தெரிந்ததே. ஜிசாங்கை சீனாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது மற்றும் அதன் சுதந்திரத்தை ஆதரிக்கக் கூடாது என்ற அதன் உறுதிமொழிகளைக் கடைப்பிடிக்குமாறு அமெரிக்கத் தரப்பை வலியுறுத்துகிறோம் என்று இந்தியாவில் உள்ள சீன தூதரகம் கூறியது.

மேலும் அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். மைக்கேல் மெக்கால் தலைமையிலான குழுவில் அமெரிக்க காங்கிரஸின் நண்பர்களுடன் ஒரு நல்ல கருத்துப் பரிமாற்றம் இருந்தது. இந்தியா மற்றும் அமெரிக்க விரிவான உலகளாவிய கூட்டாண்மையை முன்னேற்றுவதில் வலுவான இருதரப்பு ஆதரவை நாங்கள் ஆழமாக மதிக்கிறோம், என்று பிரதமர் மோடி கூறினார்.

அடுத்த தலைமுறை ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பம் இரண்டையும் தயாரிப்பதில் ஜனநாயக நாடுகள் முன்னணியில் இருப்பதை உறுதிசெய்ய, அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவது மூலோபாய நலனில் உள்ளது என்று நான் பிரதமர் மோடியிடம் கூறினேன், என்று மெக்கால் மோடியுடனான தனது சந்திப்பில் இந்தியா மற்றும் அமெரிக்கவின் மூலோபாய கூட்டுறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு தனது பணி அனுமதி புதுப்பிக்கப்படாததால் இந்தியாவை விட்டு வெளியேற நேரிட்டதாக பிரான்ஸ் பத்திரிகையாளர் செபாஸ்டின் பார்சிஸ் கூறிய குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது. பார்சிஸ் ஒரு OCI கார்டு வைத்திருப்பவர், மேலும் பத்திரிகை பணிகளைச் செய்ய ஒப்புதல் தேவை. அவர் மே 2024 இல் அனுமதி புதுப்பித்தலுக்கு மீண்டும் விண்ணப்பித்திருந்தார், அவருடைய வழக்கு பரிசீலனையில் உள்ளது, என்று வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dalai lama is free to practice his religion in india


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->