பெங்களூர்: சொத்து பிரச்சனையில் மாமியாரை கொலை செய்த மருமகள் கைது.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் சொத்துப் பிரச்சனையில் மாமியாரை கொடூரமாக கொலை செய்த மருமகளை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஸ்ரீராமபுரா பகுதியை சேர்ந்தவர் ராணி(76). இவரது மருமகள் சுகுணா. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராணி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஸ்ரீராமபுரா போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் சந்தேகத்தின் அடிப்படையில் சுகுணாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை செய்ததில், குடும்ப சொத்தை பிரித்துக் கொடுக்காமல் இருந்ததால் அடிக்கடி சுகுணா அவரது மாமியாரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இதையடுத்து சம்பவத்தன்று ஏற்பட்ட சொத்து தகராறில் ஆத்திரமடைந்த சுகுணா மாமியாரை பயங்கரமாக தாக்கியுள்ளார். இதில் கழுத்துப்பகுதியில் சுகுணா கொடூரமாக தாக்கியதால், ராணி பரிதாபமாக உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார், மாமியாரை கொடூரமாக கொலை செய்த மருமகள் சுகுணாவை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Daughter in law arrested for murdering mother in law over property dispute in bangalore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->